முக்கிய செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீப் பரவல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேலும் 39 புதிய சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளன

373

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்றும் 39 இடங்களில் காட்டுத்தீ புதிதாக ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து்ளளனர்.

புதிதாக ஏற்பட்டுள்ள இந்த 39 காட்டுத்தீச் சம்பவங்களுடன் சேர்த்து, தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 476 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,565 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதையும், அதனால் 1,180 சதுர கிலோமீடடர் பரப்பளவு தீக்கிரையாகி விட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் பற்றியெரிந்து வந்த இரண்டு பெரிய காட்டுத்தீ ஒன்றாகிவிட்டதில் அதில் மட்டும் சுமார் 300 சதுரக் கிலோமீடடர் பரப்பளவு எரிந்துபோய் விட்டதாக கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *