முக்கிய செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்ற நீதிபதிகைது; வான்கூவர் மேயர் அதிர்ச்சி

236

ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்ற நீதிபதியை வெள்ளிக்கிழமை காலை காவல்துறை அதிகாரிகள் தவறாக தடுத்து வைத்து, கைவிலங்கிட்டு கைது செய்தமை குறித்து வான்கூவர் மேயர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வான்கூவர் மேயர் கென்னடி ஸ்டீவர்ட் (Kennedy Stewart) இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், முதல் கறுப்பின நீதிபதியான செல்வின் ரோமிலியிடம் ( Selwyn Romilly) மன்னிப்புக் கோரியுள்ளார்.

English Bay அருகே நபர் ஒருவர் பொதுமக்களை உதைத்தும், குத்தியும், எச்சில் உமிழ்ந்தும் தாக்குவதாக கிடைத்த தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல் துறையினர், சந்தேக நபர் தொடர்பாக வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு ஒருவரை தடுத்து வைத்து கைவிலங்கிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த நபர் தாம் ஓய்வுபெற்ற நீதிபதி என்பதை வெளிப்படுத்தியதை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டதுடன்,  தாக்குதலில் ஈடுபட்டவர் அதேபகுதியில் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வான்கூவர் காவல்துறையினர் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *