ஐப்பசி 18 ஆம் நாள் கிங்ஸ்டன் நகரமும் யாழ்ப்பாண நகரமும் இரட்டை நகரங்களாக பிரகடனம்

1230

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாக உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரசபையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த தகவலில், குறித்த ஒப்பந்தத்தில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கையெழுத்திடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், எதிர்வரும் 18ஆம் நாள் கிங்ஸ்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் கிங்ஸ்டன் நகரசபையின் அதிகாரிகளுடன் உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளதாகவும் அதில் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தில், சுமார் 12 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர் என்பதுடன், தமிழ் அந்த நகரத்தின் இரண்டாவது மொழியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிங்ஸ்டன் நகரம் ஏற்கனவே, ஜேர்மனியின் ஓல்டன்பேர்க் மற்றும் தென்கொரியாவின் வனாக்-கு நகரங்களுடன் இதுபோன்ற இரட்டை நகர உடன்பாட்டை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு:

https://www.kingston.gov.uk/news/article/489/the_royal_borough_of_kingston_upon_thames_twins_with_jaffna
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *