முக்கிய செய்திகள்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் குடும்பத்தினர் கனடாவை வந்தடைந்துள்ளனர்

1466

பிரித்தானிய இளவரசர் வில்லியம் குடும்பத்தினர் எட்டுநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று கனடாவை வந்தடைந்துள்ளனர்.

இதற்கு முன்னர் திருமணமான புதிதில் ஐந்து ஆண்டுகளின் முன்னர் கனடாவுக்கு வருகை தந்திருந்த அவர்கள், தற்போது தமது பிள்ளைகளான 3 வயது இளவரசர் ஜோர்ஜ் மற்றும், 16 மாதங்களேயான இளவரசி சார்லெட் சகிதம் நேற்று விக்டோரியாவை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் அவர்களை பிரதமர் ஜஸ்டின் ரூடோ தம்பதியர், ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன், பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் கிறிஸ்டி கிளார்க் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் ஆயிரக்கணக்கான மக்களால் சூழப்பட்டிருந்த பிரிட்டிஷ் கொலம்பிய சட்டமன்றத்திற்கு சென்ற பிரித்தானிய இளவரசர் தம்பதியருக்கு, அங்கு சிறப்பான விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய இளவரசர், திருமணமாக மூன்று மாதங்களில் இங்கு வந்திருந்ததை நினைவூட்டியதுடன், தமது வாழ்க்கையின் மிக முக்கியமான அந்த காலகட்டத்தில் கனேடியர்கள் வழங்கிய இதமான வரவேற்பு என்றுமே மறக்க முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான் இந்த தடவை தாம் கனடாவுக்கு தமது பிள்ளைகளுடன் வருகை தருவதையிட்டு பெருமகிழச்சி அடைவதாகவும், இந்த அழகிய நாட்டுடனான அவர்களது ஆயுட்கால நட்பு தற்போதிலிருந்து ஆரம்பமாவதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *