முக்கிய செய்திகள்

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடியாது!

276

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடியாது என ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமே சிறந்த ஒப்பந்தமெனவும் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பரிந்துரைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு அதை மாற்றாது எனவும் அவர் தெரிவித்தார்.

எக்காரணத்தைக்கொண்டும் பிரெக்சிற் ஒப்பந்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என ஜீன்-க்ளூட் ஜுங்கர் உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் அயர்லாந்தின் எல்லையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை எனவும் அது தொடர்பான கொள்கையை அகற்றுவதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.

நேற்றைய வாக்கெடுப்பு உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக எச்சரித்த ஜுங்கர், ஆனாலும் ஒப்பந்தமொன்று எட்டப்பட முடியுமென தாம் இன்னும் நம்புவதாகவும் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *