முக்கிய செய்திகள்

பிலிப்பைன்ஸை தாக்கிய மாங்குட் சூறாவளி சீனாவை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது

511

சனிக்கிழமையன்று பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்குட் புயலால் ஏற்பட்ட உயிர் பலிகள் மற்றும் பொருளாதார சேதங்களை அந்நாடு கணக்கிட்டு வருகிறது.

இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இந்த புயல் அடுத்து ஹாங்காங்கை தாக்கும் என்றும், குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதனால், புயலால் ஏற்பட்ட சேதங்களை தெளிவாக கணக்கிட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

விவசாயத்தை மையமாக கொண்ட பிலிப்பீன்சின் காக்கயான் மாகாணத்தில் பயிர்களுக்கு பெருத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இவ்வாறான நிலையில் பிலிப்பைன்ஸின் முக்கிய தீவான லூசனின் வட கிழக்கு பகுதியில் பாக்கோ என்ற இடத்தில் சனிக்கிழமையன்று கரையை கடந்ததுடன், மணிக்கு 900கிமீ வேகத்தில் வீசிய இந்த புயல், தற்போது சீனாவின் தெற்கு பகுதியை நோக்கி நகர்கிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *