பீல் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அப்பிராந்தியத்தில் கொரோனா தாக்கத்தின் வீச்சு அண்மைய நாட்களில் குறைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அங்கு தடுப்பூசி வழங்கும் மையங்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெளிநோயாளர் பிரிவுகளை மீள இயக்குவது பற்றி தற்போது ஆராயப்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும், அதற்கான அனுமதிகள் இன்னமும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.