முக்கிய செய்திகள்

புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

1268

இலங்கையில் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வணிக சம்மேளன நிகழ்வு ஒன்றின்போது  இதனை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்வரை அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் பொருளாதர நிலைமைகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்த இரா.சம்பந்தன், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், அது இலங்கை மீனவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் விவசாயம், கால் நடை வளர்ப்பு, மீன் பிடித்துறைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும், இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கையை எதிர்க்காமல், அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளை இலங்கையர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இரா சம்பந்தன் கூறியுள்ளார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *