புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், தற்பொழுது அந்தப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமைக்கான காரணம் புரியவில்லை என அவர் குறிப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு, நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு என்றும் எங்கள் அதிகாரம், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும் எனவும அரசாங்கத்திடம் சம்பந்தன் கோரியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
Apr 05, 2019, 13:09 pm
394
Previous Postஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
Next Postபுலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் போட்டி பரீட்சை – ஜனாதிபதி