முக்கிய செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருக்கிறது.

41

மாறுபாடு ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், புதிய வகை கொரோனா வைரஸ், புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள கொரோனா அறிகுறிகளுடன், மேலதிகமாக சோர்வு, பசியின்மை, தலை வலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலி, தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகுறிகளும், தென்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய வகை கொரோனா வைரஸ் முன்பைவிட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *