முக்கிய செய்திகள்

புதிய மருத்துவமனைகள் உருவாக்கத்தால் சீனாவின் மீது சந்தேகம்

21

கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டதாக கூறுகின்ற சீனா அவசர அவசரமாக 6 புதிய மருத்துவமனைகளை அமைத்து வருவது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நாடான, சீனா கடுமையான கட்டுப்பாடுகளின் மூலம், மிகவேகமாக தொற்றைக் கட்டுப்படுத்தி அதிலிருந்து மீண்டது.

கடந்த 5 மாதங்களாக அங்கு நிலைமை வழமைக்குத் திரும்பி விட்ட நிலையில், தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சீனா மீண்டும் புதிதாக மருத்துவமனைகளை அவசர அவசரமாக கட்டி வருகிறது.

கடந்த சனிக்கிழமை 1500 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனையை சீனா கட்டி முடித்துள்ளது.

இது கொரோனா நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டு வரும் மொத்தம் 6500 அறைகள் கொண்ட  6 மருத்துவமனைகளில் ஒன்றாகும்.

இதேபோல் 3000 அறைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

பல மாகாணங்களில் மீண்டும் நோய் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சீனா மருத்துவமனை கட்டும் பணியை வேகப்படுத்தி பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *