முக்கிய செய்திகள்

புதிய 2,000 ரூபா நாணயத்தாள்

178

புதிய 2 ஆயிரம் ரூபா நாணயத்தாளை இந்த ஆண்டு வெளியிடவுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த 2 ஆயிரம் ரூபா நாணயத் தாள் வெளியிடப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டில் மத்திய வங்கியினால், 2 ஆயிரம் ரூபா நாணயத் தாள் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த நாணயத் தாள், மிகவும் பெரியதாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்த கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, சுற்றோட்டத்தில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *