முக்கிய செய்திகள்

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி – மதுரை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார்

974

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டி இரு காளையர்கள் பலியாகியுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கோரி மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இருவர் பலி – மதுரை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராப்பூசலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். போட்டி நடைபெறுவதையொட்டி நேற்று மாலை முதல் அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டது. வாடிவாசல் சீரமைப்பு மற்றும் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றி தடுப்பு கட்டைகள் மற்றும் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டது.

இன்று காலை போட்டி தொடங்கியதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ஆக்ரோ‌ஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

இன்றைய போட்டியின்போது காளை மாடுகள் முட்டித் தள்ளியதில் காயமடைந்த இருவர் ஜல்லிக்கட்டு திடலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், மதுரை நகரில் உள்ள ஜெய்ஹிந்த் நகரில் ஜல்லிக்கட்டை ஆதரித்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் பங்கேற்ற சந்திர மோகன்(48) என்பவர் நீர்சத்து குறைபாடு காரணமாக இன்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *