புதுடெல்லியில் இருந்து வந்த வானூர்திகளில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று, கனடா சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மார்ச் 4ஆம் நாளில் இருந்து வன்கூவருக்கு வந்த ஒன்பது வானூர்திகளிலும், ரொறன்ரோவுக்கு வந்த 21 வானூர்திகளிலும், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ரொறன்ரோவுக்கு வந்த 14 வானூர்திகளில் குறைந்தபட்சம் 6 கோரொனா தொற்றாளர்கள் பயணித்துள்ளனர்.
மார்ச் 9 மற்றும் 13ஆம் திகதிகளில் ரொறன்ரோவில் தரையிறங்கிய இரண்டு விமானங்களில், அதிகளவு தொற்றாளர்கள் பயணம் செய்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,
மார்ச் 13ஆம் நாள் ரொறன்ரோவில் தரையிறங்கிய எயர் இந்தியா வானூர்தியில் பயணம் செய்த 35 பேரில் 22 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.