இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த உடல்களை தோண்டி எடுத்து அவற்றுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆடைகளை திருடி விற்ற சந்தேக நபர்கள் 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் பரவிய தை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த குழுவினர் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் இறந்த சடலங்களில் அணிவிக்கப்பட்டிருக்கும் ஆடைகளை திருடி சுத்தம் செய்து புதிய ஆடைகள் போல் மாற்றி புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் முத்திரைகளை பதித்து விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 520 போர்வைகள், 127 குர்தாக்கள், 52 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட மை குறிப்பிடத்தக்கது


Previous Postஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பிரணவாயு உற்பத்திஆரம்பம்
Next Post12 எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம்