முக்கிய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

191

அரபிக்கடலில் உருவாகி உள்ள, ‘டவ்டே’ புயல் தொடர்பாக, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் பங்கேற்று, புயல் சின்னம் குறித்த நிலவரம், மழை தொடர்பான சாத்திய கூறுகளை எடுத்துரைத்தார்.

இதனை அடுத்து, அரபிக்கடலில் உருவாகி உள்ள, புயல் சின்னத்தை தொடர்ந்து, கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில், உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய, மலை மாவட்டங்களில், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை, தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *