பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான லூஜெய்ன் அல்-ஹத்லூல் (Loujain al-Hathloul) விடுதலை

35

சவுதி அரேபியாவில், மூன்று ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான லூஜெய்ன் அல்-ஹத்லூல் (Loujain al-Hathloul) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட, லூஜெய்ன் அல்-ஹத்லூல் (Loujain al-Hathloul) மீது பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, 68 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், 34 மாதங்களுக்கு பின்னர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் இருந்து ஹத்லூல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், ஹத்லூலிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் பயணத் தடை தற்போதும் அமுலில் உள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *