பெண் விமானிகளால் இயக்கப்படும் எயர் இந்தியா விமானங்கள்

42

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு,  எயர் இந்தியா விமானம் பெண் விமானிகளால் இயக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகநீளமான, வடதுருவம் வழியான இந்த விமானப் பாதையை கடந்து கப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள், வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.

சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரையிலான 16 ஆயிரம் கி.மீ.  நீளமுடைய சவால் நிறைந்த இந்த பாதையை பெண் விமானிகள் கடந்துள்ளனர்.

சவால் நிறைந்த  இந்த தூரத்தை கடப்பதற்கு அதிக அனுபவமும், திறமையும் கொண்ட  ஆண் விமானிகள் மாத்திரமே, இதுவரை  அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 9ம் திகதி இரவு 8.30 மணிக்கு சான்பிராஸ்கோவில் இருந்து நான்கு பெண் விமானிகள் மற்றும் 238 பயணிகளுடன் புறப்பட்ட புறப்பட்ட விமானம், சுமார் 17 மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணித்த பின்னர்,  இன்று அதிகாலை 3.20 மணியளவில் பெங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

இந்த வரலாற்று சாதனைப் படைத்த கப்டன் சோயா உள்ளிட்ட நான்கு பெண் விமானிகளுக்கு விமான நிலைத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *