பென்சில்வேனியா மாகாணத்தில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டிரம்ப் தரப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து பென்சில்வேனியா மாகாண தேர்தல் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தள்ளுபடி செய்துள்ளனர். இது டிரம்ப்க்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.