முக்கிய செய்திகள்

பெயர்மாற்றப்படவுள்ள தாஜ்மஹால்

34

இந்தியாவில் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் தான் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் அமைந்துள்ளது .

இது முகலாய பேரரசர் ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜுக்காக கட்டிய கல்லறை என கூறப்பட்டு வருகிறது .

தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன்பு இங்கு ஒரு சிவன் கோவில் இருந்ததாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் கூறிவருகின்றன.

தற்சமயம் ஆளும் பா.ஜ.க அரசின் சுரேந்தர் சிங் என்ற சட்டமன்ற உறுப்பினர் தாஜ்மஹாலின் பெயரை மாற்றப் போவதாக கூறி நாடு தழுவிய அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன்பாக ஏற்கனவே அங்கு சிவன் கோவில் இருந்தது. எனவே இதன் பெயரை ராம் மஹால் அல்லது சிவாஜி மஹால் என்று மாற்ற இருக்கிறோம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார் சுரேந்திர சிங்.

எனவே, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தாஜ்மஹால் ,ராம் மஹால் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுரேந்திர சிங் இதற்கு முன்பும் இவ்வாறு பேசி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *