முக்கிய செய்திகள்

பெருந் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கவனயீர்ப்பு

1342

பெருந் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சரோஜினி சிவச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆரப்பாட்ட பேரணி, யாழ் சத்திர சந்தியில் ஆரம்பித்து பிரதான வீதியூடாக சென்று வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.

தோட்டத்தொழிலார்களின் விடயத்தில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், 1,000 ரூபா சம்பளமும் வாரத்தில் ஆறுநாள் வேலை வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று காலை வவுனியாவிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களுடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறு்ப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *