முக்கிய செய்திகள்

பெருவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் வர்த்தக மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ!

1226

செயற்பாட்டுக்கு வராது போகக்கூடும் என அஞ்சப்படும் ஆசிய பசுபிக் வர்த்தக உடன்பாடு குறித்த மாநாடு இன்று பெரு நாட்டின் தலைநகரில் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ஜஸ்டின் ரூடோ அந்த நாட்டைச் சென்றடைந்துள்ளார்.

ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாடு சுமார் 45 நிமிடங்களுக்கு மட்டுமே நடைபெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த இந்த ஆசிய பசுபிக் கூட்டிணைவு கட்டமைப்பில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ளப் போவதாக, அமெரிக்க அதிபராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையில், குறித்த இந்த ஒப்பந்தம் செயலிழந்து போகும் நிலையை எட்டியுள்ளதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ட்ரம்பின் தெரிவுக்கு பின்னர் இந்த மாநாடு எதிர்மாறான ஒரு போக்கிற்கு முகங்கொடுக்கும் இந்த நிலையில், குறித்த இந்த மாநாடு பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு மிகவும் முக்கியமானது என கருதப்படுகிறது.

அமெரிக்க காங்கிரசில் இதற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை தாமும் கைவிடுவதாக ட்ரம்பின் வெற்றிக்கு பின்னர் பராக் ஒபாமாவும் அறிவித்துள்ள போதிலும், குறித்த இந்த ஒப்பந்தம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிருந்து உறுப்பு நாடுகள் விலகக்கூடாது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தவிர பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் நேரடிப் பேச்சுகளையும் நடாத்தியுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இன்று இந்த மாநாட்டுக்கு முன்னதாக அதிபர் ஒபாவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ள நிலையில், இன்றைய இந்த மாநாடு கனேடிய பிரதமருக்கு முக்கியத்துவம் மிக்கதாக அமையக்கூடும் என்று கண்காணிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *