பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இறுதியில் நினைவுக் கல்லொன்றை நாட்ட திட்டமிட்டிருந்த நிலையில் குறித்த கல் சதிமுயற்சியால் அங்கிருந்து எடுத்துச் செல்லபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி பல தடைகளையும் உடைத்து தனது இலக்கான பொலிகண்டியை இன்று மாலை 6.40 மணிக்கு சென்றடைந்தது.
அதன்போது நினைவுக்கல்லை நடுவதற்குரிய ஏற்பாடுகள் நிறைவுற்றிருந்த போதும் கல்லை அங்கிருந்து யாரோ மாயமாக்கியமையால் அந்த முயற்சி கைகூடியிருக்கவில்லை.
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற போராட்டத்தில் இவ்விதமான சதியை எதிராளிகளால் இறுதி தருணத்திலேயே செய்த முடிந்துள்ளது.
கல்லை ஒழித்தாலும் பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான போரட்டம் சர்வதேசத்தினை தொட்டு விட்டது என்றார்.