பேராயரின் கருத்து கவலை அளிக்கிறது; மைத்திரி

41

தன்னைப் பற்றி கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் வெளியிட்ட கருத்து தொடர்பில் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்திற்று சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த பேராயர் மெல்கம் ரஞ்சித், மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்து கருத்த வெளியிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி தனது கடமைகளை செய்யத் தவறியவர் எனவும், இவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஆடை அணிந்துகொண்டுதான் கூறுகின்றாரா? என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டிருந்தார்.

பேராயரின் இந்தக் கருத்து தொடர்பில் இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அவரின் அந்தக் கருத்து தொடர்பில் நான் மிகவும் கவலையடைகின்றேன். என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்த அமைச்சரவை உப குழு, அதன் தேடல்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளித்துள்ளது.

அமைச்சரவை உப குழுவின் தலைவர் சமல் ராஜபக்‌ஷ இந்த ஆய்வு அறிக்கையைக் கையளித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *