முக்கிய செய்திகள்

பேருந்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

41

ரொறன்ரோவில் போக்குவரத்து பாதையில், பேருந்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பிராம்டன் மேயர் பற்றிக் பிறவுண் தெரிவித்துள்ளார்.

அமசோன் (Amazon) விநியோக மையத்தில் ஏற்பட்ட தொற்றை அடுத்து, பெரும் எண்ணிக்கையான பேருந்துச் சாரதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாலேயே, பேருந்துச் சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Steeles Avenue West வழியான 511 ஆவது இலக்க வழித்தடத்தில், பேருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிராம்டன் மேயர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை இன்று தொடக்கம் அமுலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *