உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 14பேர் உயிரிழந்துள்ளனர்

398

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 14பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் பலியானவர்கள் எண்ணிக்கை 14 என்றும், 17பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளனர் எனவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *