பேலியகொட நவீன மனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

126

பேலியகொட நவீன மனிங் சந்தையில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 120 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன்சந்தையில் உருவாகிய கொரோனா கொத்தணி இன்னமும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், பேலியகொட நவீன மனிங் சந்தையில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை சுகாதார அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *