முக்கிய செய்திகள்

பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…

43

பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை சிறிலங்கா ஜனாதிபதிக்கு வழங்க வேண்டுமென தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு, கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து, விமல் வீரவன்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலரி மாளிகையில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கோரிக்கையை சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கொண்டு செல்லுமாறும், இந்தச் சந்திப்பில் பங்கேற்ற 40ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *