பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

44

பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது இடங்களில் பொது மக்கள் முக கவசம் அணிவதையும், நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

முக கவசம் அணியாமல், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வேண்டும்  என்றும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை, கடந்த ஆண்டை போல் கண்காணிக்க வேண்டும்  என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் அதிகம் கூடும் தேர்தல் பிரசார கூட்டங்கள், கலாச்சார, வழிபாட்டு மற்றும் ஏனைய கூட்டங்களுக்கு பொது மக்கள் முக கவசம் அணிவதை கட்டாய நிபந்தனையாக விதித்து அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *