முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பொருத்து வீடுகளுக்கு பதிலாக பொருத்தமான வீடுகளைவலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட போராட்டம்!

1202

மீள் குடியேற்ற அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருத்து வீடுகள் தங்களுக்கு வேண்டாம் என்றும், தங்களுக்கு தங்கள் சூழலுக்கும் பொருத்தமான வீட்டையே தருமாறு வலியுறுத்தியும், பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டு, கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்துகெண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மீள்குடியேற்றத்திலும் சர்வாதிகாரமா?, மக்களின் விருப்பமா மந்திரியின் ஆசையா?, 16 இலட்சத்தில் பலகை வீடா?, றெஜிமென்ட் பாணியில் றெஜிபோம் வீடுகளா?, குசுனி இல்லாத வீட்டில் குடியிருக்கலாமா? போன்ற கேள்விகளை முன்வைத்ததுடன், தமது வீட்டுத் திடத்தில் விளையாட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 35,452 புதிய வீடுகளும், 6,179 திருத்த வீடுகளும் தேவையாக காணப்பட்ட நிலையில், இதில் கடந்த ஆண்டு வரை அரச – அரசசார்பற்ற மற்றும் இந்திய அரசின் வீட்டுத்திட்டம் என 20,714 புதிய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே இன்னமும் 14,738 புதிய வீடுகள் கிளிநொச்சிக்கு தேவையாக உள்ளன என மாவட்டச் செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிப்பதுடன், 1,441 திருத்த வீடுகளும் தேவையாக உள்ளது என்று கிளிநொச்சி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சினால் நடைமுறைப்படுத்தடவுள்ள பொருத்து வீட்டுக்கே இன்று கிளிநொச்சியில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இலங்கை சனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருக்கான மனுக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர், வட மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கான மனுவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் கையளிக்கப்பட்டது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *