“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின்போது, சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நடவடிக்கைகளைப் பிரித்தானிய இம்முறை புதிய பிரேரணை ஊடாக முன்னெடுக்கும்.
பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து சிறிலங்கா ஒருபோதும் நழுவ முடியாது.” என பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் (SHARA HULTON) தெரிவித்தார்.
சிறிலங்காவிற்கான பிரிட்டன் தூதுவரின் அழைப்புக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பில் இன்று அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
சிறிலங்கா அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் விதமாகத் தயாரிக்கப்படும் புதிய வரைபு தொடர்பில், தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படுகின்றது எனவும் சுமந்திரன் எம்.பியிடம் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜெனிவா விவகாரங்கள், சிறிலங்கா அரசின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.