முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பொறுப்புக்கூறல் செய்யப்படாது நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது

274

பொறுப்புக்கூறல் செய்யப்படாது சமாதானத்தினை கட்டியெழுப்பவோ நல்லிணக்கத்தினை ஏற்படுத்தவோ முடியாது என்பதை சிறிலங்காவுக்கு மீளவும் நினைவூட்டுவதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார். 

தைப்பொங்கல், தமிழ் மரபுத் திங்கள் ஆகியவற்றை முன்னிட்டு சமஷ்டி லிபரல் கட்சி நாடாளுமன்றக் குழு இணையத்தில் நடத்தும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வில் சூம் செயலி ஊடாக இணைந்து கொண்ட அவர், சிறிலற்காவில்  பொறுப்புக்கூறல் செய்யபடுவதோடு, நிலையான சமாதானத்தினை ஏற்படுத்துதல்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுதி அளிக்கப்பட்ட விடயங்களை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றில் கனடா தொடர்ந்தும் கரிசனை கொண்டிருக்கும் என்றும் கூறினார்.

கனடா தனது இறைமையுடன் மேம்பட்ட நிலைமைகளை அடைவதற்கான பயணத்தில் கனடா வாழ் தமிழர்களின் பங்களிப்பு  இன்றியமையாது உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடிகளிலிருந்து மீண்டெழுவதற்கும் அந்த சமூகத்தின் பங்களிப்பு காத்திரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலாதேவ ஹாரிஸ் நியனம் பெற்றுள்ளமையை நினைவு கூர்த்த அவர், இளம் தமிழ் பெண்களுக்கு அவர் சிறந்த முன்னுதாரணமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் துணை ஜனாதிபதி என்ற அதியுச்சமான பதவிக்குச் சென்றிருப்பதை தமிழ் பெண்களும் முன்மாதிரியாக கொண்டு எதிர்வரும் காலத்தில் தமது இலட்சியப் பயணங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த தைப்பொங்கலில் நேரடியாக கலந்துகொண்டிருந்தமையை நினைவு கூர்ந்தஅவர், இம்முறை தொற்றுப்பரவல் காரணமாக இணையவழி ஊடாக இணைந்திருப்பதாகவும், தைப்பொங்கலின் பெறுமதியான அமைதி, சமாதானம் நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.

அதேநேரம், வணக்கம், இனிய பொங்கல் நல்வாழ்த்தக்கள் என்று அவர் தமிழ் மொழியில் தனது உரையின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *