முக்கிய செய்திகள்

போதிய வளங்கள் இல்லாததால் இலங்கையை நிர்ப்பந்திக்க முடியவில்லை என்று ஐ.நா பொதுச்செயலர் தெரிவித்துள்ளார்

1006

போதுமான வளங்கள் இல்லாத காரணத்தினாலேயே பொறுப்பு கூறல் பொறிமுறையை விடயத்தில் இலங்கை அரசை ஐக்கிற நாடுகள் மன்றத்தினால் நிர்பந்திக்க முடியாமல் இருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோ நகரில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயத்தில் ஐ.நா. ஏன் தோல்வியை சந்திக்கவேண்டி ஏற்பட்டது எனவும், இலங்கை விடயத்தில் ஏன் இதுவரை சரியான பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஐ.நா. செயலாளர் நாயகம் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடுகளுக்கு பொறுப்புக்கள் இருக்கின்றன எனவும், குறிப்பாக அனைத்துலக சட்டங்களை ஏற்று கடைபிடிக்க வேண்டிய பொறுப்புக்கள் அவற்றுக்கு இருக்கின்றன எனவும், ஆனால் இலங்கை அதனை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வளப்பற்றாக்குறைகள் காரணமாக ஐ.நா.வினாலும் அதனை சரியான முறையில் செய்ய முடியவில்லை எனவும், இந்த விடயம் பற்றி தாங்கள் ஆராய்ந்து தங்களது அணுகுமுறைகளை மாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன அழிப்பு, போர்குற்றங்கள், மனிதத்திற்கு ஏதிரான குற்றங்கள் போன்றனவற்றிக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறை இல்லை என்றும் ஐ.நா செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *