முக்கிய செய்திகள்

போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் 3 படகுகளை இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றல்

47

அரபிக்கடல் பகுதியில் 300 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 5 துப்பாக்கிகளுடன் 3 படகுகளை இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அரபிக்கடலில், இலட்சத்தீவுக் கூட்டங்களில் ஒன்றான, மினிக்கோய் தீவு அருகே சந்தேகத்துக்கு இடமான 3 படகுகளை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

உடனடியாக கடலோர காவல்படை படகுகள் மற்றும் உலங்குவானூர்தி என்பன விரைந்து சென்று 3 படகுகளையும் சுற்றி வளைத்து, சோதனையிட்டிருந்தன.

அந்த படகுகளில் 300 கிலோ ஹெரோயின், ஐந்து ஏ.கே ரக துப்பாக்கிகள், 1000 ரவைகள் என்பன இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, படகுகள் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, படகில் இருந்தவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *