முக்கிய செய்திகள்

போர்க் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்களை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழிநடத்தியிருந்தார்

461

போர்க் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்களை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழிநடத்தியிருந்தார் என்று ஐவெநசயெவழையெட வுசரவா யனெ துரளவiஉந Pசழதநஉவ எனப்படும் உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் தலைவி யஸ்மின் சூக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
கோதபாய ராஜபக்ஷவின் கட்டளையின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் இலங்கைப் படைகள் இருந்தமையால், அவை புரிந்த மீறல்களுக்கு கோதபாய ராஜபக்ஷவே பொறுப்பென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோதபாயவிற்கு எதிராக கலிபோர்னிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறித்து லண்டனில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பிலான சகல விதமான பொறுப்புக்களையும் கோதபாய ராஜபக்ச ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இச் சம்பவங்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆவணப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டதுடன் இலங்கை அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டது.
பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் இந்த முறைகேடுகள் நடைபெற்றதா அல்லது சரியான முறையிலேயே செயற்பட்டார்களா என்றும் அவர் நன்கு அறிந்திருந்தார் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை விசாரணை செய்ய அல்லது தண்டிக்க சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் மீது கோதபாய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பாதுகாப்புக் கட்டமைப்பு முழுவதிலும் சித்திரவதை ஒரு கொள்கையாக விளங்குவதாக யஸ்மின் சூக்கா கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *