முக்கிய செய்திகள்

போர்க் குற்றங்கள் தொடர்பில் எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென ..

338

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில்  எனப்படும் கலப்புப் பொறிமுறையைக் கொண்ட நீதிப்பொறிமுறையை அமைப்பது சாத்தியமற்றதென இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் தெரிவித்துள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையின் 40-வது கூட்டத்தொடரில் இன்றைய இலங்கை தொடர்பான விசேட அமர்வில் கருத்துரைத்த வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாறு கூறினார்.
இலங்கை நீதித்துறைப் பொறிமுறைகளில் வெளிநாட்டுக் குடிமக்கள் இடம்பெறவேண்டுமானால், அதற்கு அரசியலமைப்பு மாற்றப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட்டு, பின்னர் சர்வசன வாக்கெடுப்பும் தேவைப்படுமென இலங்கை அரசின் உயர் மட்டம் ஏற்கனவே மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர்களிடம் விளக்கிக் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் 92 சதவீதமான தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு;ளதாக தெரிவித்த அவர், 75 சதவீதமான காணிகளே விடுவிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறானதெனவும் தெரிவித்தார்.
இலங்கைப் படையினர் குற்றங்களைப் புரிந்ததாக எந்தவொரு ஐக்கிய நாடுகள் அறிக்கையிலும் உறுதி செய்யப்படவில்லையென்றும் அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டார்.
இதேவேளை பல்வேறு யுத்தக் குற்ற காணொளி ஆதாரங்களுடன் பிரித்தானியாவின் ஃசனல் 4 ஊடகம் தயாரித்த ளுசi டுயமெய’ள முடைடiபெ குநைடன ஆவணக் காணொளி 2011ம் ஆண்டு ஜூன் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் பொது அமர்வில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *