முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

போர் இடம்பெற்ற காலத்தில் இந்த உடலங்கள் புதைக்கப்பட்டிருந்தால், காணாமல் போனோரின் உறவினர்களிடம் மரபணு சோதனை!

522

மன்னார் பாரிய மனித புதைகுழியின் மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் மரபணு பரிசோதனைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உண்டு என்று காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் சதொச வளாகத்தில் இதுவரை 323 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 314 மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 28 சிறார்களுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவற்றின் காலப்பகுதியை நிர்ணயம் செய்யும் வண்ணம் புளோரிடாவின்  ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட காபன் அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் மரபணு பரிசோதனை நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்று சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் இந்த உடலங்கள் புதைக்கப்பட்டிருந்தால், காணாமல் போனோரின் உறவினர்களிடம் மரபணு சோதனை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *