முக்கிய செய்திகள்

போலி கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ்கள் – அடையாளம் கண்டது CBSA

45

போலி கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ்களை சமர்ப்பித்து, கனடாவுக்குள் நுழைய முயன்ற 30 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று, கனடா எல்லை சேவை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 ஜனவரி 7ஆம் நாளுக்கும், மார்ச் 24 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ்களுடன் வந்த 10 பேர் கனடிய விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று, கனடா எல்லை சேவை முகவர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பெப்ரவரி 15ஆம் நாளுக்கும், மார்ச் 24 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், போலி பிசிஆர் சான்றிதழ்களுடன் தரைவழியாக கனடாவுக்குள் நுழைய முயன்ற 20 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு போலி பிசிஆர் சான்றிதழைப் பயன்படுத்தி கனடாவுக்குள் நுழைய முனைவது, மோசமான குற்றம் என்றும், அதற்கு தண்டப்பணம் அறவிடப்படலாம் அல்லது குற்றவியல் சட்ட நடவடிக்கையோ எடுக்கப்படலாம் என்றும் கனடா எல்லை சேவை முகவர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *