பௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துமாறு ….

364

பௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துமாறு தொடர்புடையவர்களைக் கேட்டுக் கொள்வதாக தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது.
வடக்குக் கிழக்கில் தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் பல சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதாகவும், இலங்கை அரசின் முழுமையான ஆதரவுடன் அவை இடம்பெறுவதாகவும் அறிக்கை ஒன்றில் பேரவை குறிப்பிட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு அவசரமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு, குடியேற்றங்களை அமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்டுள்ள தமிழர் மரபுரிமைப் பேரவை, இந்த விடயத்தைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவித்தபோதிலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லையென குறை கூறியுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *