முக்கிய செய்திகள்

பௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி

300

பௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்திற்கு எடுத்துக் காட்டாகும் என யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி மிகஹாஜ்துரே விமல தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியேற்றதன் பின்னர் சர்வமத தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்போதே விகாராதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி விமல தேரர் மற்றும் நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நமதகல சத்மகீத்தி திஸ்ஸ தேரரையும் சந்தித்துள்ளார்.

இதனையடுத்து யாழ் ஆயரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். நல்லூர் கந்தசாமி கோயில் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆகியவற்றுக்கு சென்ற ஆளுநர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *