முக்கிய செய்திகள்

பௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

303

பௌத்தத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கையின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பௌத்த விகாரை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், எனினும் இந்த விடயத்தைத் தான் பரப்புரை செய்யவேண்டிய தேவை இல்லையனக் கூறினார்.

சிங்கள பௌத்தர்களெனக் கூறிக் கொள்ளும் சிலர், அரசியல் நோக்கத்துடன் அவ்வாறு செய்வதாகவும், நேர்மையாக செயற்படவில்லையெனவும் அவர் கண்டனம் வெளியிட்டார்.

அரசியலமைப்பின் புதிய வரைபு இன்னமும் தயாரிக்கப்படவில்லையெனவும், ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த பரிந்துரை மீளப் பெறப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *