முக்கிய செய்திகள்

மகராஷ்ரா வைத்தியசாலையில் தீ- 14 பேர் பலி

70

மகாராஷ்டிரா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலம்- பல்கார் மாவட்டம், விரார் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

ஆனாலும் குறித்த சம்பவத்தினால் 13 கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதனடிப்படையில் உயிரழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் பலர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *