முக்கிய செய்திகள்

மகிழ்ச்சியான ஹஜ் பண்டிகையாக அமையட்டும்! பிரதமர் வாழ்த்து

1457

அனைத்து முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான ஹஜ் பண்டிகையாக அமையட்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புனித ஹஜ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தமது வாழ்த்துச் செய்தியில்,

ஹஜ் பண்டிகையின் ஆன்மீக பெறுமதி உலக வாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வழியமைக்கட்டும்.

தியாகம், ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியன தொடர்பிலான உன்னத பாடங்களை ஆண்டு தோறும் எமக்கு நினைவூட்டி கற்றுத் தரும் பண்டிகையாக ஹஜ் பண்டிகை அமைந்துள்ளது.

ஹஜ் பண்டிகை உலக வாழ் முஸ்லிம்களின் ஒற்றுமை சகோதரத்துவத்தை பறைசாற்றி நிற்கின்றது.

சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளை களைந்து சகவாழ்வை நிலைநாட்டவும், தியாகத்துடன் தன்னிடம் இருப்பதனை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வழியமைக்கும் ஓர் பண்டிகையாக இந்த பண்டிகை அமைந்துள்ளது.

இஸ்லாமிய மதத்தின் அர்த்தத்தினை முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றி எமக்கும் கற்றுத் தரும் ஒர் சந்தர்ப்பமாக இந்த பண்டிகை அமைந்துள்ளது எனவும் இலங்கை மற்றும் உலக வாழ் இஸ்லாமியர்களுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உவகை கொள்வதாகவும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *