மக்களவைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலேயே கூட்டணி அமையுமென தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைந்தாலும், கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலேயே அமையுமெனத் தெரிவித்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றம் சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பங்களை விநியோகிக்கும் நடவடிக்கை கட்சித் தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகியது.
விண்ணப்பங்கள் எதிர்வரும் பத்தாந் திகதி வரை, இருபத்தையாயிரம் ரூபா செலுத்தி விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்று, நிரப்பிக் கையளிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
.

மக்களவைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலேயே கூட்டணி !
Feb 04, 2019, 12:32 pm
258
Previous Postவடக்கு கிழக்கில் கறுப்புக் கொடிகளுடன் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன.
Next Postபிரிக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி பிரித்தானியா விலகிக் கொள்ளும் விவகாரம்