அதிமுக-பாஜக இடையிலான மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் உள்ள
தனியார் நட்சத்திர ஹோட்டலில் 2ம் கட்டமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னதாக பிப்., 14ம் தேதி ஏற்கனவே கூட்டணி குறித்து அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய சென்னை வந்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, முதளிதரராவ் உள்ளிட்டோர் பாஜக சார்பில் பங்கேற்றனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி : பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
Feb 19, 2019, 16:54 pm
262
Previous Postபேஸ்புக், இணைய உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் செயல்படுவதாக பிரிட்டன் நாடாளுமன்றக் குழு அறிக்கையில் குற்றம்
Next Postகாஷ்மீரில் நடந்த தாக்குதல் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் ...