முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பாடசாலைச் சிறுமிகள் இருவர் சிறிலங்கா படையினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது

650

இனப்படுகொலையாளிகளான சிறிலங்கா இராணுவச் சிங்கள சிப்பாய்களால் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பனிச்சங்கேணி பாடசாலை மாணவிகள் இருவரே இவ்வாறு பாலியல் வன்புணர்விற்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த 18 ஆம் நாள் குறித்த சிங்கள சிப்பாய்கள் மட்டக்களப்பில் இரண்டு தமிழ் பாடசாலை மாணவிகளை கடத்திச்சென்று கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் பதின்மூன்று மற்றும் பதினைந்து வயதினை உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே இந்த குற்றத்தினைப் புரிந்த சிங்கள இராணுவ சிப்பாய்களை காட்டிக் கொடுக்கக் கூடாதெ பாதிக்கப்பட்ட சிறுமிகளது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரிகள் அச்சுறுத்திவருகின்றனர் என்று கூறப்படுகிறது.

குறித்த சிறுமிகள் பள்ளிக்கு சென்று திரும்புகையில் கடத்தப்பட்டுள்ளனர் எனவும், குழந்தைகளைத் தேடி வந்த கிராமவாசிகள் மாலை 6 மணியளவில் அவர்களை கண்டுபிடித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாணவிக் பயிலும் பாடசாலை மற்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை ஆகியன சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நகரத்திற்கு வடக்கே சுமார் 58 கிலோமீடடர் தொலைவில் பனிச்சங்கேணி பகுதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *