முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு போதனா மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா

219

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் பணியாற்றும்,  21 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் கே.கலாரஞ்சனி தெரிவித்தார்.

இன்றுநடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தகவல் வெளியிடுகையில்,

மருத்துவமனை ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகளுக்கு பரவாமலும் நோயாளிகளிருந்து  ஊழியர்களுக்குப் பரவாமலும் தடுப்பதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், போதனா மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து, அருகில்  உள்ள மருத்துவமனைகளில் தங்களுக்கான  சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *