மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன்

164

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக் கடிதம் ஆளுநர் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை மாநகரசபையின் ஆணையாளராக க.சித்திரவேல் கடமையாற்றியிருந்த நிலையில், நிர்வாக சேவையின் முதல் தரத்தினைச் சேர்ந்த மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச சேவையில் ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் 1990ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றினார்.

அதன்பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உதவி காணி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர், மத்திய வங்கியின் கிழக்கு மாகாண வறுமை ஒழிப்பு நுண்கடன் திட்டத்தின் கிழக்கு மாகாண முகாமையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *