தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர், கூழாவடி, மாமாங்கம், குமாரபுரம், புன்னைச்சோலை, இருதயபுரம், கருவேப்பங்கேணி, பாரதி வீதி, எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வீடுகளில் வெள்ளம் தேங்கியிருப்பதால், பலர் இடம்பெயர்ந்து, றவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அதேவேளை, படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகலும், அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.