முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்கள்

108

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவினை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் முன்னமே தீர்மானித்தபடி எமது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சியினை வரவழைத்து இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையளிப்பதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *